தமிழ் சினிமாவில் கவுண்டமணியும் மற்றும் செந்திலுடன் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் தான் நடிகை வாசுகி. காரைக்குடியை பூர்விகமாக கொண்ட இவர் சினிமா மீது இருந்த ஆசையால் பல போராட்டங்களுக்குப் பிறகு திரைப்படங்களில் நடித்தார். அதிலும் குறிப்பாக கவுண்டமணியுடன் இணைந்து கூட்டல் பெருக்கல் சொல்லித் தரும் கணக்கு டீச்சர் ஆகவும் பிச்சைக்காரியாக வரும் காமெடியின் மூலமாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சினிமா மட்டுமல்லாமல் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் இவர் இருந்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் பட்ட கஷ்டங்கள் பற்றி பகிர்ந்து உள்ளார். அதில், தனக்கு கர்ப்பப்பையில் மூன்று கட்டிகள் இருந்ததால் புற்றுநோயாக மாறிவிடும் என்று மருத்துவர்கள் கூறினர். அறுவை சிகிச்சை செய்யக்கூட என்னிடம் பணம் இல்லை. என் அப்பா திடீரென விட்டுச் சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தை நான் தான் கவனித்துக் கொண்டேன். பிறகு அம்மாவிற்கு கேன்சர் ஆப்ரேஷன் மற்றும் தங்கைக்கு திருமண செலவு என அனைத்தையும் நான்தான் பார்த்துக் கொண்டேன். என் கணவராலும் பணத்தை இழந்தேன். இதனால் என்னுடைய வாழ்க்கை முடிந்து விட்டது.

தற்போது கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். நடிகர்கள் சிலர் உதவி செய்வதை அறிந்து அவர்களை சந்திக்க வீட்டுக்கு சென்ற போது செக்யூரிட்டி விரட்டி விடுகிறார். சமீபத்தில் விஜயகாந்த் இறந்த செய்தியை கேட்டு கடன் வாங்கிக் கொண்டு காரைக்குடியில் இருந்து வந்தேன். பிரேமலதா விட உதவி கேட்ட போது நீங்க ஏதாவது வேலை செய்யக்கூடாதா என்று கேட்டார்.

நான் இங்கே ஏதாவது வேலை போட்டு கொடுங்கள் என்று கூறியதும் என்னுடைய போன் நம்பரை வாங்கிக் கொண்டு ஆயிரம் ரூபாயை கையில் கொடுத்து அனுப்பி வைத்தார். தற்போது காரைக்குடியில் தங்குவதற்கு கூட இடமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். இப்போது என்னுடைய முழு வாழ்க்கையும் மாறிவிட்டது. யாராவது உதவி செய்தால் ஏதாவது ஒரு கடை போட்டாவது பிழைத்துக் கொள்வேன் என்று வாசுகி வருத்தத்துடன் பேசி உள்ளார்.
