இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், லட்டு!.. மகனின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய நடிகை சினேகா..!!

By Nanthini on ஆகஸ்ட் 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழில் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அச்சமுண்டு திரைப்படத்தில் நடித்த போது நடிகை பிரசன்னா மீது காதல் வயப்பட்ட நிலையில் இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து சினேகா பிரசன்னா தம்பதியினருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண் குழந்தையும், 2020 ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.

   

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் பல வருடங்கள் தலைகாட்டாமல் இருந்த சினேகா பிறகு தனுஷின் பட்டாஸ் திரைப்படம் மூலம் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மகள் பிறந்த பிறகே சினிமாவில் பல வருடங்கள் நடிக்காமல் இருந்த சினேகா தற்போது நடிகர் விஜயின் கோட் திரைப்படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்தில் சினேகா விஜயின் மனைவியாக நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.

   

 

அதேசமயம் சின்னத்திரையிலும் நடன நிகழ்ச்சிகளில் சினேகா நடுவராக பணியாற்றி வருகின்றார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் இவர் நடுவராக சிறந்த ஜோடியை தேர்வு செய்து வருகின்றார். இந்த நிலையில் நடிகை சினேகா தனது மகன் விஹானின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என பலரும் கலந்து கொண்ட நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sneha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@realactress_sneha)

author avatar
Nanthini