ஷோபனா தமிழ் சினிமாவில் பணியாற்றிய நகைச்சுவை நடிகை ஆவார். ஒரு சில பெண் நகைச்சுவை நடிகர்கள் தான் மக்கள் மனதில் இடம் பிடித்தனர். மனோரமா கோவை சரளா வரிசையில் பிரபலமானவர் நகைச்சுவை நடிகை ஷோபனா. ஆரம்பத்தில் சின்னத்திரை தொடர்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்தார் சோபனா. லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் பிரபலமாகி அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
கோவை சரளா போலவே சினிமாவில் வடிவேலுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் தோன்றியிருப்பார் நகைச்சுவை நடிகை ஷோபனா. அவரை பிரபலமாக்கியது ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படம். அந்த திரைப்படத்தில் செல்ல தாயி என்று வடிவேலுவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அது இன்றளவும் பிரபலமாக இருக்கிறது. வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகையாக கோவை சரளாவுக்கு அடுத்ததாக இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 2012 ஆம் ஆண்டு ஷோபனா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பலருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாக இருந்தது. அடுத்த கோவை சரளாவாக தமிழ் சினிமாவில் வலம் வருவார் என்று எதிர்பார்த்த ஒரு நடிகை உயிரிழந்தது வருத்தத்தை ஏற்படுத்தியது. தற்போது நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு சோபாவின் அக்கா ஆனந்தி தனது தங்கையை பற்றி மிகவும் உருகமாக கூறியிருக்கிறார். எனது தங்கை மிகவும் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். அவளால் சாப்பிட முடியவில்லை நடக்க முடியவில்லை வலிக்குது வலிக்குதுனு சொல்லுவா. அதனால கூட அவர் தற்கொலை பண்ணி இருக்கலாம்.
ஆனா இந்த மீடியாகாரங்க என் தங்கச்சியை சும்மாவே விடல. ஆர்ட்டிஸ்ட்னா அவ்வளவு கேவலமா போச்சா அவங்களுக்கு தோனினதெல்லாம் எழுதுனாங்க அவ அங்க நிக்கிறாங்க இங்க நிக்கிறானு தேவை இல்லாதவங்க கூட எல்லாம் சம்பந்தப்படுத்தி வடிவேலு சார் கூட சம்பந்தப்படுத்தி ரொம்ப தப்பு தப்பா எழுதுனாங்க. அவ்ளோ மனசுக்கு எங்களுக்கு கஷ்டமா இருந்தது. இந்த மாதிரி ஒரு உண்மை தெரியாம இப்படி யாருமே எழுத கூடாது என்று கண்ணீருடன் பேட்டி அளித்திருக்கிறார் நகைச்சுவை நடிகை சோபனாவின் அக்கா ஆனந்தி.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…
திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…
சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20…