இவருக்கா இப்படி ஒரு நிலை? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் சந்தானம் படங்களின் டைலாக் ரைட்டர்..

By Nanthini on மாசி 15, 2025

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்றது. லொள்ளு சபா மறக்க முடியாத நகைச்சுவை தொடர். இந்த தொடரில் இருந்து தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் என்று சொல்லப்படும் பல நட்சத்திரங்கள் வந்திருக்கின்றன. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் வெளியான நகைச்சுவை தொடர் தான் லொள்ளு சபா. இந்தத் தொடரில் சந்தானம், சுவாமிநாதன், ஜீவா, மாறன், பாலாஜி, மனோகர் மற்றும் ஜாங்கிரி மதுமிதா போன்ற எண்ணற்ற நடிகர்கள் பங்கேற்று இருந்தனர்.

   

இந்த நிகழ்ச்சி மூலம் தங்களது வாழ்க்கையை தொடங்கிய இவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது தங்களுக்கு என ஒரு இடத்தை பிடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக சந்தானம், பாலாஜி மற்றும் மனோகர் உள்ளிட்ட நடிகர்கள் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி தொடர்களையும் திரைப்படங்களையும் கேலி செய்து எடுக்கப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தது. அப்படி இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் சிரிக்கோ உதயா.

   

 

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தனது பயணத்தை தொடங்கிய இவர் பல திரைப்படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தானம் படங்களுக்கு காமெடி வசனங்கள் எழுதிய இவருக்கு சர்க்கரை வியாதி இருந்துள்ளது. இதனால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலமாக இவருடைய வலது கால் அகற்றப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தற்போது வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருவதோடு இவர் விரைவில் உடல் நலம் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.