பெரும்பாலும் சினிமா உலகில் நடிக்கும் பல நடிகர்கள் சினிமா பின்னணி கொண்டவர்கள் மூலமாகத்தான் நுழைகின்றனர். அதன்படி தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் தேனி முருகன். இவர் நிறைய திரைப்படங்களில் பல காமெடி கதாபாத்திரங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக ஈர நிலம் திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து சாணக்கு பிறந்த சோன என்ற காமெடி வசனம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவர் தமிழ் சினிமாவில் ஐயா, பருத்திவீரன், தாஜ்மஹால், ஈரநிலம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இறுதியாக தமிழ் சினிமாவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் இதுவரை தமிழ் சினிமாவில் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதனை தவிர்த்து சின்னத்திரையிலும் நுழைந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனாக்காலம் காலங்கள் தொடரில் பச்சைக்கு அப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலை சீரியலிலும் புலிக்குட்டிக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சீரியல்களில் நடித்த போதும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்றும் ஒரு சில திரைப்படங்களில் இவரை சில துணை கதாபாத்திரங்களில் காண முடிகிறது. இப்படியான நிலையில் தேனி முருகனுக்கும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கும் உள்ள உறவு முறை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இயக்குனர் பாரதிராஜாவின் அம்மாவும் தேனி முருகனின் அம்மாவும் உடன் பிறந்த சகோதரிகள். அதன்படி பார்த்தால் பாரதிராஜாவும் தேனி முருகனும் சகோதரர் முறை தான்.

ஆனால் தேனி முருகன் இதுவரை தன்னுடைய சகோதரர் பெயரை சினிமாவில் எந்த ஒரு இடத்திலும் பயன்படுத்தியது கிடையாது. தேனி முருகன் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், என்னதான் பாரதிராஜா எனக்கு சகோதரர் என்றாலும் அவருடைய பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தி நான் சினிமாவில் வாய்ப்பு கேட்டது கிடையாது. என்னால் என்னுடைய அண்ணனின் பெயருக்கு எந்த இடத்திலும் களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தேனி முருகன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். தற்போது இவர் தான் பாரதிராஜாவின் தம்பி என்று அறிந்த ரசிகர்கள் வியப்புடன் கேட்டு வருகிறார்கள்.
