தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இயக்குனர்களின் ஒருவராக இருந்து கொண்டிருப்பவர் தான் தனுஷ். கமர்சியல் திரைப்படங்களில் நடித்தாலும் ஒரு பக்கம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கலைப் படங்களிலும் நடித்து வருகின்றார். ஆடுகளம் மற்றும் அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களுக்காக தேசிய விருதையும் வாங்கினார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் தனுஷ் தற்போது இந்திய சினிமாவில் ஒரு முக்கிய நடிகராகவும் மாறி உள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த திரைப்படத்தை தனுஷ் இயக்கி இருந்தார்.

இதனை தாண்டி தற்போது தான் நடிக்கும் திரைப்படங்களை தானே இயக்கவும் தொடங்கிவிட்டார். ராயன் திரைப்படத்தில் தனுஷ் உடன் காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, தனுஷின் அண்ணன் செல்வராகவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பே தன் சகோதரி மகனை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை பாதி இயக்கி முடித்திருந்தார். ராயன் திரைப்படத்திற்கு பிறகு அந்த படத்தின் மீதியை இயக்கி முடித்த நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த மாத வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தை தனுஷ் இயக்கி வருகின்றார். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் உடன் நடித்த தேசிய விருது வாங்கிய நித்தியா மேனனும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பொறுத்தவரையில் இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை முடித்த கையோடு போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிகர் ஜெயராம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் முழுக்க முழுக்க ஜெயராம் ஒரு பயங்கரமான வில்லனாக காட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுடன் இணைந்து நடிகர் அர்ஜுனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இட்லி கடை படத்தை முடித்த கையோடு இந்த திரைப்படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
