Categories: சினிமா

எல்லா விஷயத்துலயும் எனக்கு உதவி செஞ்சதே சாய் பல்லவி தான்… ஓப்பனாக பேசிய காமெடி நடிகர் கருணாகரன்..!

Spread the love

இயக்குனர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் தண்டேல். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும் இப்ப படத்தின் வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் புஜ்ஜி தல்லி ஒரு பரபரப்பான ஹிட்டானது.

அதனைப் போலவே இரண்டாவது சிங்கிள் நமோ நம சிவாய பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் நாக சைதன்யா மீனவராக நடித்துள்ளார். ஆரம்பத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவிக்கு இடையேயான அதிகமான காதல் காட்சிகள் இருக்கின்றன. பிறகு மீனவர்கள் கூட்டத்தில் சைதன்யா முக்கியமான பொறுப்பை ஏற்கின்றார்.

பிறகு மீன் பிடிக்க போகும் பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்த கூட்டம் மாட்டிக் கொள்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தை சைதன்யா எதிர்ப்பது போல காட்டப்படுகிறது. இந்தியாவின் பலத்தை பற்றி பாகிஸ்தான் ராணுவத்திடம் அவர் பேசும் காட்சிகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அங்கிருந்து அவர் எப்படி தப்பித்து வருகிறார் என்பது தான் படத்தின் கதை ஆகும். அவர் வரும் வரை சாய் பல்லவி அவருக்காக காத்திருக்கின்றார். இந்நிலையில் பட புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் காமெடி நடிகர் கருணாகரன், “படத்தின் கதையை கேட்டதும் எனக்கு ரொம்பவே பிடிச்சது ஓகே சொல்லிட்டேன்.

ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு தெலுங்கு தெரியாது சார் என்று சொன்னேன். அவங்க ஒன்னும் பிரச்சினை இல்ல நாங்க உங்களுக்கு உதவி பண்றோம் என்று சொன்னாங்க. ஆனா எல்லாத்தையும் படிச்சிட்டு போவேன். ஆனாலும் மறந்திருவேன். பக்கத்துல இருந்த ஒரே ஹெல்ப் சாய் பல்லவி தான். அதன்பிறகு நல்லாவே பேச ஆரம்பிச்சிட்டேன்.  ரொம்பவே challeng ஆக இருந்தது” என்று பேசியுள்ளார்.

 

Soundarya

Recent Posts

“சீனாவுக்கு நான் தரும் கிப்ட்” அதிபர் ஷி ஜின்பிங் என்னைக் கட்டிப்பிடித்து வரவேற்பார்… ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் போட்ட ‘மாஸ்’ பதிவு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…

7 minutes ago

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

14 minutes ago

BREAKING: எனக்கும், அன்புமணிக்கு எந்த தொடர்பும் இல்லை… பாமக ராதாமஸ் அதிரடி அறிவிப்பு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

19 minutes ago

வரும் 7 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும்… தவெக தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…

23 minutes ago

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

55 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

1 மணத்தியாலம் ago