இன்ஜினியராக இருந்து டாப் காமெடி நடிகராக கலக்கும் கருணாகரனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள்..!!

By Nanthini on ஆகஸ்ட் 24, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர்தான் கருணாகரன். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

   

தமிழ் சினிமாவில் முதன் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு என்ற திரைப்படத்தின் மூலம் கருணாகரன் நடிகராக அறிமுகமானார்.

   

Raveena

 

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த சூது கவ்வும் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Raveena

அந்த திரைப்படத்தை தொடர்ந்து பீட்சா, ஜிகர்தண்டா மற்றும் விவேகம் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
அது மட்டும் அல்லாமல் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற தமிழ்த் திரைப்படத்தின் திரைக்கதையையும் 2013 ஆம் ஆண்டு இவர் இணைந்து எழுதியுள்ளார்.
Vignesh Sivan Vignesh Sivan
ஆரம்பத்தில் கருணாகரன் கெமிக்கல் இன்ஜினியராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு அக்சென்சர் நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணியாற்றினார்.
Vignesh Sivan
திரைப்படத் தயாரிப்பாளர் நலன் குமாரசாமி தனது நெஞ்சுக்கு நீதி என்ற குறும்படத்தில் நடிப்பதற்கு இவரை அணுகினார். அங்கிருந்துதான் கருணாகரன் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கினார்.
தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கருணாகரன் தனது 2013 ஆம் ஆண்டு தென்றல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளன.
தற்போது நடிகர் கருணாகரன் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு அழகிய புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
author avatar
Nanthini