VIDEOS
விஜய் வாழ்க்கையில் பொக்கிஷமாக நினைக்கும் பொருள்… இப்போ என்கிட்ட தான் இருக்கு.. நடிகர் சஞ்சீவ்வின் வைரல் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் விஜயின் நெருங்கிய நண்பர் தான் நடிகர் சஞ்சீவ். சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே விஜய் மற்றும் சஞ்சீவ் இருவரும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரி காலத்தில் இருந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக அதே அன்புடன் சினிமா வரை இவர்களின் நட்பு தொடர்கின்றது.
அந்த நட்போடு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை, நிலாவே வா, பத்ரி மற்றும் சந்திரலேகா உள்ளிட்ட படங்களில் சஞ்சீவை நடிக்க வைத்தார். அது மட்டுமல்லாமல் மெட்டிஒலி என்ற சீரியல் மூலமாகவும் சஞ்சீவ் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் தற்போது நடித்து வருகின்றார். அதே சமயம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். இதனிடையே சஞ்சீவிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு காபி வித் அணு என்ற நிகழ்ச்சியில் விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் ஒரு வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் அதில் பேசிய விஜயின் நண்பர் சஞ்சீவ், விஜய் மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்த மார்க் ஷீட் ஒன்றை எடுத்து வைத்திருப்பதாக கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க