தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் பாவா லட்சுமணன். வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான காமெடிகளில் நடித்து கலக்கி இருப்பார். கலகலப்பு திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து இவர் நடித்த காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்றன. பெரும்பாலும் இவர் வடிவேலு காம்பினேஷனில் பல திரைப்படங்களில் நடித்திருப்பார். தமிழ் சினிமா உலகில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிக்கவில்லை.

தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் பொருளாதாரம் நெருக்கடியிலும் உள்ள நிலையில் தனது நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு நடிகர் ஜீவா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் பண உதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பாவா லட்சுமணன் சமீபத்தில் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில், நான் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த சமயத்தில் ஆனந்தம் படப்பிடிப்பில் ஒரு சம்பவம் நடந்தது. நான்கு அண்ணன் தம்பிகள் வைத்து எடுக்க வேண்டிய ஒரு காட்சியை எடுக்க இயக்குனர் திட்டமிட்ட நிலையில் மம்முட்டி படப்பிடிப்புக்கு காலை 6.30 மணிக்கு தயாராகி வந்துவிட்டார்.

ஆனால் அப்பாஸ் எட்டு மணிக்கு மேலாகியும் வரவில்லை. மிகவும் சவகாசமாக அவர் வந்த போது இதை பார்த்து எனக்கு செம்ம கோவம் வந்துருச்சு. உடனே அவர் வந்ததும் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இருக்கீங்க என கேட்டேன். அதற்கு அப்படித்தான் வர முடியும் என்று அவர் திமிரா பதில் சொன்னதும் கோபத்தில் அடிக்க போயிட்டேன். பாலகிருஷ்ணா உண்மையிலேயே அடிச்சிட்டாரு. அதுக்கப்புறம் கொஞ்ச நாள் ஒழுங்கா வந்து அப்பாஸ் பிறகு தம் அடிக்க போயிட்டு ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் லேட்டா வருவாரு. அந்த மாதிரி அவர் படப்பிடிப்பில் திமிராகவும் அசால்ட் ஆகவும் நடந்து கொள்ளுவார் என்று பாவா லட்சுமணன் பேசியுள்ளார்.
