தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அவரே கதாநாயகனாக இருந்ததால் தனக்கான கதைகளை மட்டுமே எழுதவேண்டிய சூழல் வந்ததால் அவரால் இயக்குனராக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் ஜொலிக்க முடியவில்லை.
அதன் பின்னர் தன்னுடைய மகள் சரண்யாவை கதாநாயகியாக பாரிஜாதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். அந்த படம் நல்ல கவனம் பெற்றாலும் கமர்ஷியலாக வெற்றிப் பெறவில்லை. அதனால் அவர் அடுத்தடுத்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. மேலும் அவர் என்ன ஆனார் என்றே தெரியாமல் பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார்.
இப்போது அவர் திரைப்படங்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஆடை வடிவமைத்துக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்ற செய்தியை வெளிப்படுத்தினார். அவர் காதல் தோல்வி காரணமாக திருமணமே செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title
இந்நிலையில் மகள் பற்றி தற்போது பேசியுள்ள பாக்யராஜ் “என் மகள் ஒருவரைக் காதலித்தார். அது எனக்குப் பிடிக்கவில்லை. அதற்கு ஜாதி, மதம் போன்ற காரணங்களைத் தாண்டி வேறு ஒன்று இருந்தது. அதனால் அவர் எங்களை விட்டு பிரிந்த சென்றபோதும் நான் கோபமாக இருந்தேன்.
அதன் பின்னர் அவர் காதல் தோல்வியில் முடிந்தது. அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிந்து சோகமாக இருந்தது. பூர்ணிமாதான் அவரை போய் பார்த்தார். அவருக்குக் குழந்தை பிறந்தபோது என் கையில்தான் முதலில் கொடுத்தனர். என் கோபமெல்லாம் போய்விட்டது. இப்போது என் பேரன் இல்லையென்றால் நான் இல்லை” என பேசியுள்ளார்.
