“அவளுக்கும் கொஞ்சம் ஊத்திக் கொடு”… பீர் பாட்டிலுடன் கல்லூரி மாணவிகள் செய்த காரியம்… பதற வைக்கும் காட்சி….!

By Nanthini on மாசி 2, 2026

Spread the love

திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி அரசு கலைக் கல்லூரியில், மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து கொண்டு மது அருந்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்காக மாணவிகள் நடன ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது, ஐந்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ஒருவருக்கொருவர் பீர் பாட்டிலைப் பகிர்ந்து கொண்டு மது அருந்தியதாகத் தெரிகிறது.

இந்த வீடியோவில், “அவளுக்கும் ஊத்திக் கொடு” என்று மாணவிகள் சகஜமாகப் பேசிக் கொள்வதும், மது அருந்திவிட்டு மயங்கிவிடக் கூடாது, சரியாக நடனம் ஆட வேண்டும் என்று ஒரு மாணவி அறிவுரை கூறுவதும் பதிவாகியுள்ளது. கல்வி கற்கும் புனிதமான வகுப்பறையை மது அருந்தும் இடமாக மாற்றிய மாணவிகளின் இந்தச் செயல், வீடியோவைப் பார்த்த பொதுமக்களையும் பெற்றோர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

   

சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் சீருடையில் மது அருந்திய வீடியோ வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருவாரூரிலும் அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் காட்டப்படும் மது அருந்தும் காட்சிகள் மற்றும் குடும்பப் பின்னணி போன்ற காரணிகளே இத்தகைய ஒழுக்கக் கேடான செயல்களுக்கு அடிப்படை என கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

   

இந்தச் சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளிக்கவில்லை என்றாலும், இது போன்ற சமூகச் சீர்கேடுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இளைய தலைமுறையினர் தடம் புரண்டு செல்வதைத் தடுக்க ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகளையும், ஒழுக்க நெறிமுறைகளையும் போதிக்க வேண்டியது அவசியமாகும்.