“நீங்க எனக்கு வேண்டாம், என் லவ்வர் கூட ஓடி போறேன்”… மகளுக்காக காத்திருந்த பெற்றோருக்கு செல்போனில் வந்த குறுஞ்செய்தி… திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!

By Nanthini on ஆவணி 24, 2025

Spread the love

தேனி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 40 வயது தொழிலாளிக்கு 19 மற்றும் 15 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நர்சிங் படிக்க ஆசைப்பட்ட நிலையில் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்துள்ளார். தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில் விடுமுறையில் அடிக்கடி ஊருக்கு வந்து செல்வார். அதன்படி கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அந்த மாணவி தன்னுடைய தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உள்ளார். தனக்கு 20 நாட்கள் கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஊருக்கு புறப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய செல்போனில் சார்ஜ் இல்லை என கூறிவிட்டு அவர் போனை வைத்து விட்டார். விடுதி சாப்பாடு சாப்பிட்ட தன்னுடைய மகளுக்கு வாய்க்கு ருசியாக விடுமுறை நாட்களில் சமைத்துக் கொடுக்க வேண்டும் என ஆசையோடு மகளின் வருகைக்காக பெற்றோர் காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த தொழிலாளியின் செல்போனுக்கு தன்னுடைய மகளின் செல்போனிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், என்னை யாரும் தேடாதீர்கள், நான் காதலிக்கும் பையன் கூட ஓடி போறேன். என்னை தேடி வராதிங்க, உங்களுக்கு தான் காசு வேஸ்ட், நீங்க யாரும் எனக்கு வேண்டாம் என குறிப்பிட்டு இருந்தார். இந்த குறுஞ்செய்தியை பார்த்து அந்த தொழிலாளியும் அவருடைய குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டும் அவரிடம் பேச முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்த அந்த மாணவியை தேடி வருகிறார்கள். உண்மையிலேயே குறுஞ்செய்தியை அந்த மாணவிதான் அனுப்பினாரா அல்லது அவருடைய பெயரில் வேறு யாராவது அனுப்பினார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.