உணவு ஆர்டர் செய்த கல்லூரி மாணவி… அடுத்த நொடியே தூக்கில் தொங்கிய சோகம்…. அதிர்ச்சி தரும் காரணம்….!

By Nanthini on தை 19, 2026

Spread the love

சென்னையில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்ட விவகாரத்தில் குடும்பத்தினர் கண்டித்ததால், கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் பி.வி. கோவில் தெருவைச் சேர்ந்த ஜெய பூஜா (19) என்ற மாணவி, அங்குள்ள ராணி மேரி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் பயின்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிடாமல், அவர் வெளியில் இருந்து உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டதாகத் தெரிகிறது.

மாணவி வெளியில் உணவு வாங்கிச் சாப்பிட்டதை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ஜெய பூஜா, தனது அறைக்குச் சென்று மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்துப் பார்த்தபோது மாணவி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

   

தகவலறிந்து வந்த மயிலாப்பூர் காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இந்த விபரீத முடிவுக்கு குடும்பத்தின் கண்டனம் மட்டுமே காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சாதாரண உணவு விவகாரத்திற்காக இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.