“என் சாவுக்கு நீயே பொறுப்பு”… காதலனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை… அதிர்ச்சி தரும் காரணம்…!

Spread the love

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் அத்தோலி பகுதியை சேர்ந்த ஆயிஷா ரக்ஷா என்ற 21 வயது இளம்பெண் மங்களூரில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கேரி பண்ணடிக்கல் பகுதியை சேர்ந்த பஷிர்தீன் முகமது என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகியுள்ளார். உடற்பயிற்சி மாஸ்டர் ஆன அவரும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். அந்த மாஸ்டர் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்த நிலையில் அந்த வீட்டுக்கு மாணவி அடிக்கடி சென்று தங்குவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பும் மாணவி காதலனின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் தான் வேலை பார்த்து வரும் உடற்பயிற்சி கூடத்தில் நடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு மாஸ்டர் சென்றிருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என மாணவி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் காதலி பேச்சைக் கேட்காமல் ஓணம் கொண்டாட்டத்திற்கு அவர் சென்றுள்ளார். இந்நிலையில் காதலனின் வீட்டில் மாணவி ஆயிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிருக்கு போராடிய நிலையில் இருந்து அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தின. மாணவியை மிரட்டி அடித்ததாக அவரது உறவினர்கள் காதலன் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் மாணவியின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்ததில் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு தனது காதலனுக்கு வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் என்னுடைய மரணத்திற்கு நீயே பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த நபரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“அபார்ஷன் வரை போன தவெக வேட்பாளர் அருண்குமார்”… நடிகை சாந்தினி வெளியிட்ட பகீர் வீடியோ… கடைசி நேரத்தில் விஜய் தலையில் இறங்கிய இடி…!

திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…

9 minutes ago

விஜய் செய்த வரலாற்றுத் தவறு?… கடைசி நேரத்தில் தவெக-வுக்கு காத்திருந்த அதிர்ச்சி… மொத்தமாக ஸ்கோர் செய்த ஸ்டாலின்…!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…

17 minutes ago

“வீட்டில் ரத்தக் கறை.. சுடுகாட்டில் உடல்”…. கணவனைக் கொன்று சுடுகாட்டில் புதைத்த மனைவி…. கள்ளக்காதல் ஜோடிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…

29 minutes ago

ஹார்முஸ் நீரிணையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்… சிம்ம சொப்பனமாக இருக்கும் 5 விஷயம்…. நாளை விடியப்போவது யாருக்கு..?

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…

38 minutes ago

உலக நாடுகளை நடுங்க வைக்கும் ‘ஹார்முஸ் அதிர்ச்சி’… இந்தியப் பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றப்போகும் அந்த 21 மைல் கடல் பாதை….!

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

44 minutes ago

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

1 மணத்தியாலம் ago