“6 மாத சந்தேகம்.. போர்வையில் சுற்றப்பட்ட சடலம்”…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. உல்லாசமாக இருக்கும் போது உயிரோடு எரிக்கப்பட்ட இளம்பெண்….!

By Nanthini on ஆவணி 4, 2026

Spread the love

கோவை அருகே கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டு, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர சம்பவத்தில் வாலிபர் மற்றும் அவரது தந்தையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 31-ஆம் தேதி கிணத்துக்கடவு எல்லைக்குட்பட்ட சென்றாம்பாளையம் பிரிவு அருகே உள்ள காலி இடத்தில் பெண் ஒருவர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், முதற்கட்டமாக சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இக்கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்த கோவை மாவட்ட காவல் துறை சார்பில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் சம்பவ இடத்தைச் சுற்றியிருந்த 120-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளையும், அருகில் உள்ள பெட்ரோல் பங்க் காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்து சென்ற நபரின் காட்சிகள் சிக்கின. பொள்ளாச்சி பகுதியில் இருந்து வந்த அந்த வாகனத்தை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பழனிமுத்து (35) என்பது தெரியவந்தது.

   

இதையடுத்து பழனிமுத்துவை பிடித்து நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் ஜமீன் கோட்டாம்பட்டியைச் சேர்ந்த சங்கீதா (30) என்பதும், இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. கடந்த 6 மாதங்களாக சங்கீதா மற்றொரு நபருடன் தொடர்பில் இருப்பதாக பழனிமுத்து சந்தேகப்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஜூலை 27 அன்று பழனிமுத்துவின் வாடகை வீட்டில் இருவரும் தனிமையில் இருந்தபோது மீண்டும் தகராறு வெடிக்கவே, ஆத்திரமடைந்த பழனிமுத்து கத்தியால் குத்தி சங்கீதாவை கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

   

கொலைக்கு பின் தடயங்களை அழிக்கும் நோக்கில் தனது தந்தை குருநாதனை (60) உதவிக்கு அழைத்த பழனிமுத்து, உடலைப் போர்வையில் சுற்றி இருசக்கர வாகனத்திலேயே சென்றாம்பாளையம் காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு உடலின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர், பழனிமுத்து மற்றும் அவரது தந்தை குருநாதன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.