வீட்டுக்குள் வரக்கூடிய ஒரு சிறிய பூச்சி கூட இன்று பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது. மனிதர்கள் அச்சமோ வெறுப்போ காரணமாக மேற்கொள்ளக்கூடிய சில செயல்கள் எதிர்பாராத விதமாக ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றன. கொரியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் இருந்த கரப்பான் பூச்சியை அழிக்க முயற்சித்த போது பயங்கரமான விபத்து நடந்துள்ளது. சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்தில் அந்தப் பெண் கரப்பான் பூச்சி மீது அதிக எரிவாற்றல் கொண்ட ஸ்பிரே பயன்படுத்தி பிறகு லைட்டரால் தீ வைத்துள்ளார்.
தீ பற்றிய பூச்சி அப்பார்ட்மெண்டின் பல இடங்களுக்கு விரைந்ததால் வீட்டின் பொருள்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்த குடியிருப்புகளுக்கும் தீ பரவிய நிலையில் கட்டுக்குள் வராமல் போனது. ஐந்தாவது தளத்தில் வசித்த அந்தப் பெண் அச்சத்தில் கீழே குதித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த பயங்கர தீ விபத்து மற்றும் புகை காரணமாக 8 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்கு காரணமான பெண்ணை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். ஒரு சாதாரண விஷயத்தை கூட எச்சரிக்கையாக அணுக வேண்டும் என்பதற்கு இந்த ஒரு சம்பவம் சிறந்த உதாரணமாகும்.
