“இன்று கூடும் தமிழக அமைச்சரவை”…. பட்ஜெட்டில் வெளியாகப்போகும் ‘அந்த’ அதிரடி அறிவிப்பு.. தேதியை லாக் செய்த முதல்வர் விஜய்….!

By Nanthini on ஆடி 16, 2026

Spread the love

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் முக்கிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. வரவிருக்கும் 2026-27ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) தொடர்பாக, ஏற்கனவே அவர் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகளை நடத்தி முடித்துள்ள நிலையில், இன்றைய கூட்டத்தில் அதன் தொடர்ச்சியாக முக்கிய விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு பட்ஜெட்டிற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் துறைவாரியான நிதி ஒதுக்கீடுகள் குறித்து இறுதி வடிவம் பெறவுள்ள இந்த பட்ஜெட் கூட்டத்தொடர், ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் முறைப்படி தாக்கல் செய்யப்படலாம் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.