“எந்த ஃபார்முலாவும் ஒர்க் ஆகல”…. பணநாயகத்தை தூக்கியடித்த தவெக…. எதிர்க்களத்தை அதிரவைத்த முதல்வர் விஜய்யின் மாஸ் வெற்றி அறிக்கை….!

By Nanthini on ஐப்பசி 9, 2026

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. எந்தவித பணநாயகச் சூத்திரங்களோ, வாக்குக்கு பணமோ கொடுக்காமல், முழுக்க முழுக்க அன்பு மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலா மூலமாகப் பெறப்பட்டுள்ள இந்த வெற்றி, தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. ஊழல் சக்திகளின் கோட்டையாகத் தமிழகம் இல்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளன.

   

தேர்தல் களத்தில் தவெக தலைமையை நோக்கி வைக்கப்பட்ட அவதூறுகளுக்கும், நையாண்டிப் பேச்சுக்களுக்கும் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். குறிப்பாக, மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட திருமதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட திருமதி சத்தியபாமா ஆகியோர் ‘விசில்’ சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளனர். தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கும் மக்கள் தங்களின் தீர்ப்பு மூலம் சாட்டையடி தந்துள்ளனர் என்று தவெக தலைவர் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

   

இந்தச் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், களத்தில் நின்று அயராது உழைத்த தவெக தொண்டர்களின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றி தனிப்பட்ட ஒரு நபரின் வெற்றியோ அல்லது ஒரு கட்சியின் வெற்றியோ அல்ல; இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மற்றும் அரசியல் நாகரிகத்தின் வெற்றியாகும்.

 

எக்காலத்திலும் மக்கள் பக்கமே நின்று அவர்களோடு இரண்டறக் கலந்திருப்போம் என்று உறுதிபூண்டுள்ள தவெக, தமிழக மக்களின் நலனுக்காகவும் வளர்ச்சிாகவும் தொடர்ந்து முழுமூச்சுடன் பாடுபடும். பணநாயகத்தை வீழ்த்தி மக்கள் சக்தியை நிலைநிறுத்தியுள்ள இந்த வெற்றி, வரவிருக்கும் காலங்களிலும் தொடரும் என்பதோடு, தமிழக அரசியலில் புதிய மாற்றத்திற்கான வித்தாகவும் இந்த இடைத்தேர்தல் வெற்றி அமைந்திருக்கிறது.