லண்டன் ரேஸ் டிராக்கில் ‘தல-தளபதி’ மாஸ் மேஜிக்….. 44 கார்கள்… 2 மணி நேரப் போராட்டம்…. லண்டனில் ரேஸராக அஜித், நடுவராக விஜய் – வெறித்தனமான அப்டேட்….!

Spread the love

தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக நேற்று இரவு சென்னையிலிருந்து இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஒருவார காலப் பயணத்தில், ஒருங்கிணைந்த உள்ள முன்னணி தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்துத் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்ய அவர் அழைப்பு விடுக்கவுள்ளார். அத்துடன் அங்குள்ள தமிழ் வம்சாவளியினரைச் சந்திக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயணத்தின் மிக முக்கியமான நிகழ்வாக, சில்வர்ஸ்டோனில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற மிச்செலின் லெ மான்ஸ் கோப்பை (Michelin Le Mans Cup) கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடியசைத்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கவுள்ளார். 44 கார்கள் பங்கேற்கும் இந்த சாம்பியன்ஷிப் தொடரின் 5-வது சுற்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் அவர், இதில் போட்டியிடும் இந்திய ஓட்டுநர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கவுள்ளார். இத்தகவலை லே மான்ஸ் கப் நிர்வாகமும் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

இப்பந்தயத்தில் இந்திய நடிகரும் பந்தய வீரருமான அஜித் குமார், ‘அஜித் ரெட்ஆன்ட்’ (Ajith Redant Racing) அணிக்காக LMP3 பிரிவில் பிரான்சின் ரோமெய்ன் வோஸ்னியாக்குடன் இணைந்து களம் காண்கிறார். மேலும், இந்தியாவின் முன்னணி பந்தய வீரர்களான நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோரும் இதே அணிக்காகப் பங்கேற்கின்றனர். 5.891 கி.மீ. நீளமுள்ள கிராண்ட் பிரிக்ஸ் சுற்றுப்பாதையில் நடைபெறும் இந்த 2 மணி நேரப் போட்டி, இந்திய நேரப்படி நாளை மாலை 5.15 மணியளவில் தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதைச் செயல்படுத்தும் நோக்கிலும் இந்த பயணம் அமைந்துள்ளது. சில்வர்ஸ்டோன் பந்தய களத்தைப் பார்வையிடுவதன் மூலம், அங்குள்ள உலகத்தரம் வாய்ந்த சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வணிக ரீதியான செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

வாகனம் மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் ஏற்கனவே முன்னணி வகிக்கும் தமிழ்நாட்டில், இத்தகைய ஆய்வுகள் மூலம் விளையாட்டுச் சுற்றுலா மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்பான சிறப்பு வாகனத் தொழில்களுக்கான புதிய கதவுகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் இந்த இங்கிலாந்து பயணம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும்.

Nanthini

Recent Posts

அவனை விட்ருங்கடா… காதலனுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு… ஓடிய திருமணமான பெண்… கணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி… டெல்லியில் பரபரப்பு சம்பவம்…!

டெல்லியில் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவரின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில்…

11 minutes ago

ஐயோ பாவம்… காதல் ஜோடிக்கு உதவியதற்காகக் காவு வாங்கிய பகை… விநாயகர் மண்டபத்தில் வாலிபர் படுகொலை… ஹைதராபாத்தில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

ஹைதராபாத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடிக்கு உதவியதற்காக, கார்த்திக் என்ற வாலிபர் விநாயகர் மண்டபத்தில் வைத்து ரவுடிகளால் கொடூரமாகக்…

22 minutes ago

“எளிமையின் உச்சம்…” அபுதாபி இளவரசர் ஷேக் காலித்தின் செயலால் இணையத்தில் குவியும் பாராட்டுகள்… நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கலந்துகொண்ட அபுதாபி இளவரசர் ஷேக் காலித்…

23 minutes ago

வேற யாரையும் என்னால… நினைச்சுக்கூட பார்க்க முடியாது… குடும்பத்தை எதிர்த்து காளுவை… கரம்பிடித்த பணக்கார பெண்… வைரலாகும் காதல் சம்பவம்…!

குடும்பத்தினரின் கனவெல்லாம் இளைய மகன் பெரிய வியாபாரியாக வர வேண்டும் என்பதுதான். ஆனால், காளுவோ தன் விருப்பப்படியே ஒரு கன்னிகை…

32 minutes ago

Breaking: பட்டப்பகலில் பயங்கரம்… டாஸ்மாக்கில் இளைஞர் கழுத்தறுத்து கொடூரக் கொலை…!!

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. திருச்சி சமயபுரத்தில் டாஸ்மாக்…

38 minutes ago

அய்யய்யோ… சாலையில் தனியாக நின்ற 12 வயது சிறுமி… காரை நிறுத்தி விசாரித்த நபருக்குக் காத்திருந்த அதிர்ச்சி… நடந்தது என்ன?… இணையத்தில் வைரல்…!

அவர் தனது ஸ்கூட்டர் வழியில் பழுதாகிவிட்டதால், அதைச் சரிசெய்வதற்காக அருகிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு நடந்து செல்ல நேர்ந்ததாகக் கூறினார்.…

54 minutes ago