தமிழக அரசியல் களம் தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை மையமாகக் கொண்டு தீவிரமடைந்துள்ளது. தனிப்பெரும்பான்மை இன்றி ஆட்சி நடத்தி வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சரான விஜய்க்கு, இந்த இடைத்தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. தேர்தல் களப் பணிகளை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களிடம் ஒதுக்கியுள்ள முதலமைச்சர் விஜய், அவர்களின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து ஆய்வு செய்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் தவெக ஆட்சியில், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அமைச்சர்கள் சரத்குமார், கீர்த்தனா மற்றும் பர்வேஸ் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கூட்டணிக் கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதால், கூட்டணி அமைச்சர் உட்பட சிலரின் பதவிகள் பறிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக வந்தவர்களுக்கு அமைச்சரவையில் முன்னுரிமை அளிக்கப்பட்ட நிலையில், தவெகவின் ரசிகர் மன்றக் காலம் முதல் கட்சிக்கு உழைத்த மூத்த நிர்வாகிகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் நிலவுகிறது. இதனால், தங்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் காரணமாக புதிய அமைச்சரவைப் பட்டியலில் இடம்பெறக் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
வரும் 9-ஆம் தேதி வெளியாகவுள்ள இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையில் இருந்து யார் நீக்கப்படுவார்கள், புதியதாக யார் சேர்க்கப்படுவார்கள் என்ற ஆலோசனைகள் தவெக மேலிடத்தில் சூடுபிடித்துள்ளன. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சிக்கான முக்கியச் சோதனையாக மட்டுமின்றி, தமிழக அமைச்சரவையின் புதிய வடிவத்தையும் தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளது.
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…