பணமா? நட்பா?… வெறும் ₹2,250-க்கு விலைபோன உயிர்… நண்பனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற கொடூரம்… இறுதியில் அம்பலமான திடுக்கிடும் உண்மை…!!

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் பிஜ்னோர் பகுதியில், வெறும் 2,250 ரூபாய்க்காக நண்பரையே ஒருவர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சச்சின் என்ற இளைஞரை, அவருடைய நண்பரான பிர்ஜு என்பவர் பணத்தாசையால் இந்தக் கொடூரச் செயலுக்கு ஆளாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தன்று சச்சின் தனது பணத்தேவைக்காக, இருசக்கர வாகனத்தை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். அந்தப் பணத்தில் இருவரும் மதுபானம் வாங்கி பிர்ஜுவின் அறையில் அருந்தியுள்ளனர். மதுபோதையில் சச்சின் மயங்கி விழுந்த நிலையில், அவரது பையில் மீதமிருந்த 2,250 ரூபாயைக் கண்ட பிர்ஜுவுக்குப் பேராசை ஏற்பட்டுள்ளது. பணத்தை அபகரிக்கும் நோக்கில், மயக்க நிலையில் இருந்த சச்சின் மீது இரும்பு கூலர் மற்றும் மின்சார வயரைப் பயன்படுத்தி மின்சாரம் பாய்ச்சி அவரைப் படுகொலை செய்துள்ளார்.

இந்தக் கொடூரத்திற்குப் பிறகு, பணத்தைத் திருடிக்கொண்ட பிர்ஜு, போலீசாரிடம் சிக்காமல் இருக்க சச்சினின் உடலை வேறொரு வீட்டின் வெளியே வீசியுள்ளார். இதனை ஒரு மின்சார விபத்தாகக் காட்ட அவர் முயன்றுள்ளார். எனினும், சச்சினின் தந்தை மேடிலால் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்,. இதன்மூலம் உண்மை அம்பலமானதையடுத்து, பிர்ஜுவைக் கைது செய்த போலீசார், திருடப்பட்ட 2,250 ரூபாய் மற்றும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Gayathri

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago