கூட்டணிக்கு “செக்” வைக்க திட்டம்?…. CM விஜய் எடுத்த அதிரடி முடிவு…. தமிழக அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 31, 2026

Spread the love

கூட்டணி கட்சிகளின் ஆதிக்கத்தையும் தலையீட்டையும் தவிர்த்து, ஆட்சியிலும் கொள்கை முடிவுகளிலும் தனித்துச் செயல்படும் நோக்கில் தமிழக முதல்வர் விஜய் இடைத்தேர்தலை விரைவாக நடத்த விரும்புகிறார் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகின்றன. தற்போதைய ஆட்சி நிர்வாகத்தில் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் அதிகரித்துள்ளதால், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுத் தனிப் பெரும்பான்மையை எட்டி சுதந்திரமாக முடிவெடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது இந்த நடவடிக்கைக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. சட்டப் போராட்டங்களைக் கடந்து அரசினால் இடைத்தேர்தலை விரைந்து நடத்த முடியுமா அல்லது கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடி தொடருமா என்பதே தற்போதைய கேள்வியாக உருவெடுத்துள்ளது.