“400+ போஸ்டிங்… பின்னணியில் உளவுத்துறை ஸ்கெட்ச்”… அமைச்சர்களுக்கு செக் வைத்த CM விஜய்… பரபரப்பு உத்தரவு…!

By Nanthini on வைகாசி 25, 2026

Spread the love

தமிழக அமைச்சர்களின் தனிப்பட்ட அலுவலகங்களில் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதுகாப்புப் போலீசார் என 400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இந்த நியமனங்களில் உறவினர்களின் தலையீடோ அல்லது ஜாதி ஆதிக்கமோ இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் சமத்துவத்தையும் பேணும் நோக்கில் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தகுதி மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் மட்டுமே இந்த நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. மேலும், இந்த நியமனங்களை வெறுமனே வாய்மொழிப் பரிந்துரைகளின் அடிப்படையில் மேற்கொள்ளாமல், உளவுத்துறை (Intelligence Bureau) வழங்கும் ரகசியப் பின்னணி சரிபார்ப்பு அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே இறுதி செய்து செயல்படுத்த முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.