மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2,500…. பட்ஜெட்டிலேயே அமல்படுத்த CM விஜய் தீவிரம்…. அதிகாரிகளின் ரகசிய ரிப்போர்ட்….!

By Nanthini on ஆடி 30, 2026

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை மாதம் 2,500 ரூபாயாக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகுமா என்ற ஆவலுடன் பெண்கள் காத்திருக்கும் நிலையில், வரவிருக்கும் பட்ஜெட்டிலேயே இந்த அறிவிப்பை வெளியிட முதல்வர் விஜய் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். இருப்பினும், ஆட்சிப் பொறுப்பேற்ற 75 நாட்களிலேயே அரசு 20,881 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியுள்ள சூழ்நிலையில், தற்போதைய நிதி நிலைமை இத்தகைய கூடுதல் செலவினத்திற்கு ஏதுவாக இல்லை என்று நிதியமைச்சக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிதி நெருக்கடிகள் ஒருபுறம் இருந்தாலும், இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான மாற்று நிதி ஆதாரங்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆராய அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதால், வரவிருக்கும் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.