உச்சகட்டப் பதற்றம்…! அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை வீச்சு…! சீறும் ஈரான்… எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்…!!

By Devi Ramu on ஆடி 30, 2026

Spread the love

ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்காவின் முக்கிய ராணுவ மையங்கள் மீது ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் எவ்வித பெரிய சேதமும் ஏற்படவில்லை எனவும், ஏவுகணைகள் தங்களது இலக்குகளைத் தொடுவதற்கு முன்பே அவற்றை வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரானின் இந்தத் திடீர் அத்துமீறலுக்கு மிகக் கடுமையான முறையில் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் போர் விமானங்கள் ஈராக்கில் இயங்கி வரும் ஈரான் ஆதரவுப் போராளிகளின் முகாம்களை இலக்கு வைத்து கூட்டு வான்வழித் தாக்குதலைத் நடத்தின. இதில் ஈரானிய ராணுவ ஆலோசகர்கள் உட்படப் பல போராளிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சட்டங்களை மீறி நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ராணுவ நலன்களை மீண்டும் தாக்குவோம் என ஈரான் ஆதரவுப் படைகள் எச்சரித்துள்ளதால் அப் பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.