“நான் பண்ணிட்டேன்… நீங்க..?” – மக்கள் தொகை கணக்கெடுப்பில்.. முதல் நாளே ஃபார்ம்-க்கு வந்த முதல்வர் விஜய்…!!

Spread the love

தமிழகத்தில் 2027ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான ‘வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பிற்கான’ இணையவழி சுய-பதிவு நடைமுறை ஜூலை 17 அன்று தொடங்கியது. இச்செயல்முறை தொடங்கிய முதல் நாளிலேயே, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இணையவழி வாயிலாகத் தனது சொந்தக் குடும்ப விவரங்களைப் பதிவு செய்து மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். இது தொடர்பான விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களிலும் வெளியிடப்பட்டன.

இணையவழி சுய-பதிவை நிறைவு செய்த பின் சமூக ஊடகத்தில் பதிவிட்ட முதலமைச்சர் விஜய், மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ் சேகரிக்கப்படும் அனைத்துத் தரவுகளும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படும் எனத் தமிழக மக்களுக்கு உறுதியளித்தார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் எண்களை அறிந்துகொள்வது மட்டுமல்லாமல், எதிர்கால அரசு நலத்திட்டங்களைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் அடிப்படையாக அமையும் ஒரு முக்கியப் பணியாகும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் முழுமையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்கி இதில் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மறுபுறம், தமிழக ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அறிக்கை ஒன்றின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த முதற்கட்டக் கணக்கெடுப்பில், பொதுமக்கள் இணையவழியில் தாங்களாகவே விவரங்களைப் பதிவு செய்யும் ‘சுய கணக்கெடுப்பு’ வசதி ஜூலை 31 வரை கிடைக்கும் என்றும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று களக் கணக்கெடுப்பு நடத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

“கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த கள்ளக்காதலன்…” கத்தியால் சரமாரியாக குத்தி…! ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்… பெண்ணின் வெறிச்செயல்… பகீர்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…

12 minutes ago

ஐயோ… என் கையை முன்பே விட்டுவிட்டாள்… கணவனிடம் கையும் களவுமாகச் சிக்கிய மனைவி… வாழ்க்கையை மாற்றிப்போட்ட அந்த அதிர்ச்சி வினாடி… இணையத்தில் வைரல்…!

வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…

22 minutes ago

“என்ன விட்டுரு…” அதிகாலையில் கதறிய 70 வயது மூதாட்டி…. வாய் பேச முடியாத வாலிபரின் கொடூர செயல்…. தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…

26 minutes ago

“2 பிள்ளைகளின் தந்தை…” வேலைக்கு வந்த இளம்பெண்ணை விடாமல்…! போட்டோவை பார்த்து ஷாக்கான காதலன்… பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில்…

34 minutes ago

“பிள்ளைகளை வளர்ப்பது அம்மா.. நல்ல அப்பானு பெருமை பேசுவதா…? ரவி மோகனை மறைமுகமாக அட்டாக் செய்த ஆர்த்தி…!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.…

54 minutes ago