சேகர்பாபுவுக்கு அடுத்த செக்?… கச்சிதமாக காய் நகர்த்திய CM விஜய்.. அடுத்து நடக்கப்போகும் அதிரடி ரெய்டு….!

By Nanthini on ஆடி 16, 2026

Spread the love

தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் சேகர்பாபு ஆகியோரின் பின்னணியில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ளவிருந்த சோதனைகள் குறித்த ரகசியத் தகவல்கள் முன்கூட்டியே கசிந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எ.வ.வேலு வீட்டில் ரெய்டு நடப்பதற்கு முன்பே அவருக்கு தகவல் கிடைத்ததாகவும், அதேபோல் சேகர்பாபு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த திட்டமிட்டபோது அவரும் உஷாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த முக்கியத் தகவல்கள் தொடர்ந்து கசிந்து வருவதை தீவிரமாகக் கவனித்த தமிழக முதல்வர் விஜய், அதற்குப் பொறுப்பான லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருணை உடனடியாக பணியிட மாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபுவுக்குத் தொடர்புடைய இடங்களில் திட்டமிட்டபடி விரைவில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.