அட்ராசக்க..! நடிகர் சிம்பு விக்கெட்டை எடுத்த CM ஸ்டாலின்… இணையத்தில் செம வைரலாகும் மாஸ் வீடியோ…!!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமீபத்திய ‘Vibe With MKS’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தனது கிரிக்கெட் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ‘நட்சத்திர கிரிக்கெட்’ போட்டியில் தான் பங்கேற்றதாகவும், அதில் நடிகர் சிம்புவின் விக்கெட்டை வீழ்த்தியதாகவும் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில், நடிகர் நெப்போலியன் உட்பட மொத்தம் மூன்று பேரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதாக அவர் கூறினார். முதலமைச்சரின் இந்தக் கருத்துகளுக்குப் பிறகு, அவர் அந்தப் போட்டியில் பந்து வீசி விக்கெட் வீழ்த்தும் பழைய காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன. இணையவாசிகள் பலரும் இந்த அரிய தருணங்களை ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.