“ஐயோ என்னை விட்ருங்க”… 13 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று வாலிபர் செய்த கொடூரம்… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on மார்கழி 27, 2025

Spread the love

தஞ்சாவூர் அய்யம்பேட்டை – கட்டிமேடு காலணியை சேர்ந்த வாலிபர் பாலாஜி (26) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதிலிருந்து அங்கேயே தங்கி இருந்தார். அவருக்கு அந்தப் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுமியுடன் அவர் நெருக்கமாக பழகி வந்த நிலையில் தனியாக அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து சிறுமி தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனை அறிந்த பாலாஜி தலைமறைவான நிலையில் செல்போன் பயன்படுத்தாமல் இருந்ததால் அவருடைய இருப்பிடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை கடந்த இரண்டு மாதங்களாக போலீசார் தேடி வந்த நிலையில் தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் பதுங்கி இருந்தார்.

   

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாலாஜி மீது தஞ்சாவூரில் கொலை முயற்சி மற்றும் திருட்டு உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதிலிருந்து தப்புவதற்காக கேரளாவில் இருந்தபோது சிறுமியிடம் பழகி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. தற்போது அவரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.