தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது.
இப்படியான நிலையில் தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விடுபட்ட பெண்களின் விண்ணப்பங்கள் வருகின்ற ஜூலை 15 முதல் பெறப்படும் என சமீபத்தில் அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெற்றி நிச்சயம் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், விடுபட்ட பெண்கள் அனைவருக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 15 முதல் பெறப்படுவதாகவும் விரைவில் பரிசீலனை செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதத்திலேயே பணம் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
