இந்தி கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் எப்பொழுதுமே இவருடைய ஹேர் ஸ்டைல், உடை போன்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்தி வருவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் மும்பை விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது இவர் கையில் அணிந்திருந்த வாட்ச் தான் பலருடைய கவனத்தையும் ஈர்த்தது.
அதாவது மிகவும் ஆடம்பரமான ரிச்சர்ட் மில்லே RM 67-02 செபாஸ்டியன் ஓஜியர் என்ற வாட்ச் தான் இவர் அணிந்திருந்தார். இந்த வாட்சில் தடகள செயல்பாடுகளை மானிட்டர் செய்வதற்கு ஆப்ஷன்கள் இருக்கிறது. சுமார் 50 மணி நேரம் பவர் ரிவர்ஸ் கொண்டுள்ளது. இதனுடைய தனித்துவமான வடிவமைப்பு, அதிநவீன தொழில்நுட்பம் பலரையும் ஈர்த்துள்ளது. இந்த வாட்ச் விலை இந்திய மதிப்பில் 3.37 கோடி ரூபாய். ஒட்டுமொத்த வாட்சின் எடை வரும் 32 கிராம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
