“ஒரு ரூபாய் கூடுதல் வாங்கினாலும் ஆக்ஷன்” – 436 கடைகள் க்ளோஸ்… டாஸ்மாக் கூடாரங்களுக்கு அமைச்சர் வைத்த செக்..!!

Spread the love

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) தலைமை அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தமிழகத்தில் இதுவரை 436 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், அவற்றுடன் இணைந்து செயல்பட்டு வந்த மதுக்கூடங்களும் (பார்கள்) முழுமையாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அரசாணையின்படி மீதமுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளையும், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களையும் மூடுவதற்கான பணிகளை அதிகாரிகள் மிகவும் துரிதப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்து வந்த பணியாளர்களின் வாழ்வாதாரமும் நலனும் பாதிக்கப்படாத வகையில், அவர்களை அருகிலுள்ள இதர மதுபானக் கடைகளில் மறுபணியமர்த்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், மதுக்கூடங்களும் இரவு 10.00 மணிக்குள்ளாகக் கட்டாயம் மூடப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர், மதுபானங்களை அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட (MRP) கூடுதல் விலைக்கு விற்கும் கடைப்பணியாளர்கள் மீது துறை ரீதியான தக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

Soundarya

Recent Posts

“அடுத்த 24 மணி நேரத்தில் உலக வரைபடம் மாறப்போகிறதா?”… அமெரிக்கா – ஈரான் எடுத்த அந்த ஒற்றை முடிவு… திரைக்குப் பின்னால் நடந்த நள்ளிரவுப் பேச்சுவார்த்தை….!

உலகையே பெரும் போர்ப் பயத்தில் ஆழ்த்தி வந்த மேற்காசியப் பதற்றம், ஒருவழியாக சுமுகமான முடிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தங்களுக்குள்…

46 seconds ago

“சிஎம் விஜய் போட்ட ரகசிய உத்தரவு”…. தமிழகத்தில் நள்ளிரவில் அரங்கேறிய அதிரடி திருப்பம்… அதிர்ந்து போன அதிகாரிகள்…!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிக் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள்…

6 minutes ago

“என் மேல புகார் கொடுத்தவங்க லிஸ்ட் என்கிட்ட இருக்கு!”.. கார்த்தி சிதம்பரம் எம்பி பேசிய ஆடியோ லீக்… அலறும் அரசியல் களம்..!!

"கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த உடனேயே, காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நான் பேசியபோது எனக்கு…

8 minutes ago

காலையிலேயே குட் நியூஸ்… தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி… ஊழியர்களுக்கு அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு…!

ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் கனிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ்…

11 minutes ago

“ஃபைல்ஸ் எங்கே.. உடனே எடுங்க”… விஜய்யின் ‘ஆக்ஷன்’ லிஸ்டில் இருக்கும் அந்த 3 விஐபிக்கள் யார்?… கசிந்தது லஞ்ச ஒழிப்புத்துறை ரகசியம்…!

தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்தெறிந்து, கடந்த மே 10-ஆம் தேதி புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற…

16 minutes ago

“ஆட்சி நீடிக்குமா?”.. புதுச்சேரியில் பரபரப்பு கிளப்பிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.. ஆட்டம்காணும் அரசியல் களம்..!!!

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று புதுச்சேரிக்குச் சென்றிருந்தார். அங்குள்ள முத்தியால்பேட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர்…

18 minutes ago