நீங்க தான் ரியல் ஹீரோ…! பேருந்தில் ஏறியதும் தவறி விழுந்த முதியவர்… மின்னல் வேகத்தில் காப்பாற்றிய கிளீனர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 29, 2026

Spread the love

கேரள மாநிலம் குட்டியாட்டூர் – கண்ணூர் வழித்தடத்தில் இயங்கும் ‘பார்வதி’ என்ற தனியார் பேருந்தில் மனிதநேயத்தை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.வயதான பயணி ஒருவர் பேருந்தில் ஏற முயன்றபோது, எதிர்பாராதவிதமாகத் தடுமாறி கீழே விழப் பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த பேருந்து கிளீனரான அதுல் குக்கு என்பவர், உடனடியாகச் செயல்பட்டு அந்த முதியவரைப் பிடித்து, கீழே விழுந்து காயமடைவதிலிருந்து பத்திரமாகக் காப்பாற்றினார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கிளீனர் அதுல் குக்குவின் இந்தத் துணிச்சலான மற்றும் மனிதநேயமிக்க செயலை இணையவாசிகள் மற்றும் போலீசார் பலரும் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில், பயணிகள் பாதுகாப்பாகப் பேருந்தில் ஏறி அமரும் வரை ஓட்டுநர்கள் அவசரப்படாமல் காத்திருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.