ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமியின் வீட்டிற்கு, அவரது சித்தியின் கணவர் தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக அவ்வப்போது வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இவ்வாறு வீட்டிற்கு வந்து சென்ற சித்தப்பா, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தைப் பயன்படுத்தி சிறுமியை பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இக்கொடூரச் சம்பவம் குறித்து வெளியில் யாருக்காவது கூறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அச்சிறுமியைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளார்.
சித்தப்பாவின் தொடர் மிரட்டலால் அச்சமடைந்த சிறுமி, ஒருகட்டத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டு இச்சம்பவம் குறித்து பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருவாடானை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சித்தப்பாவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
