திக்.. திக்..! பட்டப்பகலில் துடிதுடிக்க நடந்த வெறிச்செயல்… பள்ளிக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்… போலீஸ் விசாரணையில் சிக்கிய திடுக்கிடும் உண்மைகள்…!!

By Gayathri on ஆவணி 15, 2026

Spread the love

சென்னை திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிக்கு பின்புறமுள்ள முட்புதர் ஒன்றில், பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் தனுஷ் என்ற மாணவர் படுகாயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பட்டப்பகலில் பள்ளி வளாகத்தின் அருகிலேயே அரங்கேறியுள்ள இந்த கொடூரக் கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலரே இந்த தாக்குதலில் ஈடுபட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற முதற்கட்ட சந்தேகத்தின் அடிப்படையில், தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். கொலையாளிகளைப் பிடிப்பதற்கும், கொலைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்கும் பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

   

தமிழ்நாட்டில் சமீப காலமாக மாணவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில், சக மாணவர்களால் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன் என்ற மாணவர் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த கொடூரத்தின் சுவடு மறைவதற்குள், தலைநகர் சென்னையில் பள்ளி மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது அனைவரையும் உலுக்கியுள்ளது.