வெறும் ரூ.1,000 கடனுக்காக வெடித்த மோதல்…! கத்திகளால் சரமாரியாக வெட்டிக்கொண்ட குடும்பங்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 29, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தாடிபத்திரி நகரில் உள்ள பண்டா மசூதி பகுதியில், வெறும் 1,000 ரூபாய் நிலுவைப்பணத்திற்காக இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு தகராறு கொடூரமான ரத்தக் களறியில் முடிந்துள்ளது.

செய்யத் வலி மற்றும் நெளஷாத் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கு இடையே நிலுவையில் இருந்த ரூ.1,000 கடன் தொகை தொடர்பாக வாக்குவாதம் தொடங்கியுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் தடி, இரும்புக் கம்பிகள் மற்றும் மட்டன் வெட்டப் பயன்படுத்தப்படும் கூர்மையான கத்திகளுடன் வீதிக்கு வந்து கொடூரமாகத் தாக்கிக் கொண்டனர்.

   

இந்த பயங்கர மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த செய்யத் வலி, நெளஷாத் உள்ளிட்ட 3 பேர் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இதில் இரண்டு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்தவர்களை மீட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதியில் கூடுதல் போலிஸார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.