நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் 2026 பொங்கலுக்கு ஜனவரி 9ஆம் தேதியும், சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம் ஐந்து நாட்கள் கழித்து ஜனவரி 14ஆம் தேதியும் வெளியாகிறது. இதுவரை மோதாத இந்த இரு நட்சத்திரங்களின் படங்கள், இப்போது பாக்ஸ் ஆபிஸில் நேரடியாகக் களமிறங்குகின்றன.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’, பாலய்யாவின் ரீமேக் என்றாலும், விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் அரசியல் காட்சிகளுடன் மசாலா படமாக உருவாகியுள்ளது. மறுபுறம், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் 1960களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைச் சொல்லும் கதையாக உருவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை கிண்டி ஜோதி தியேட்டரில் பேனர் வைப்பதில் இரு படக்குழுக்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அங்கு ‘ஜனநாயகன்’ படக்குழு பெரிய பேனர் ஒன்றை வைத்திருந்த நிலையில், ‘பராசக்தி’ படக்குழுவினர் உடனடியாகத் தியேட்டர் நிர்வாகத்திடம் பேசி, விஜய்யின் பேனருக்கு மேலே தங்கள் பிளக்ஸ் பேனரை வைத்துவிட்டனர்.
இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த விஜய் ரசிகர்கள், சிவகார்த்திகேயன் மற்றும் அவரது படக்குழுவினரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில், “நீ மேலே பேனர் வைத்தாலும் எங்கள் தலைவருக்குக் கீழேதான்” என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த பேனர் மோதல் காரணமாக எக்ஸ் தளத்தில் இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே தற்போது பெரிய சண்டை வெடித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…