தமிழக அரசியல் களம் ஆட்சி கவிழ்ப்பு சதி, அவதூறு பேச்சுக்கள் மற்றும் அடுத்தடுத்த கட்சித் தாவல்களால் தினந்தோறும் பரபரப்பின் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் பொறுப்பிலுள்ள ஆதவ் அர்ஜுனா மற்றும் N. ஆனந்த் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான அதிகார மோதல் வெடித்துள்ளதாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளார்.
அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை தவெக-வில் இணைப்பதற்கு ஆதவ் அர்ஜுனாவுக்குத் துளிக்கூட விருப்பமில்லை என்று பரந்தாமன் தனது பேட்டியில் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் இந்த அதிரடியான பேட்டி, தவெக கட்சிக்குள்ளான உட்கட்சிப் பூசலை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளதோடு, தற்பொழுது சமூக வலைத்தளங்களிலும் (SM) அரசியல் வட்டாரங்களிலும் விவாதப் பொருளாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
