“நாங்க நடத்துற விழா, அதனால முடியாது” தமிழ்த்தாய் வாழ்த்து பாட சொல்லி Request பண்ணுனேன்… ஆனா இப்படி சொல்லிட்டாங்க.. அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்..!!

By Soundarya on வைகாசி 21, 2026

Spread the love

புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படாதது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுமாறு தானும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால், “நாங்கள் நடத்தும் விழா, அதனால் முடியாது” என்று ஆளுநர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக ராஜ்மோகன் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தற்போதைய புதிய அரசு மற்றும் ஆளுநர் மாளிகைக்கு இடையே எழுந்துள்ள விவாதங்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ விழாக்களின் மரபுகள் குறித்தும், இந்த மறுப்பு குறித்தும் அரசியல் வட்டாரங்களில் தற்போதைய சூழலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.