நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கரப்பான் பூச்சி கட்சியின் (CJP) தலைவர் அபிஜித் தீப்கே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி அமைதியான முறையில் தொடங்கு அமைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தைக் கலைக்க, காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைக் கடுமையாக ஒடுக்கினர்.
இதன் தொடர்ச்சியாக அபிஜித் தீப்கேயை காவல்துறை வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
