தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடத் தடை விதித்துச் சுற்றறிக்கை அனுப்பப்பட்ட விவகாரத்தில், தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அந்த சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை உடனடியாகத் திரும்பப் பெறப்பட்ட நிலையில், அது கல்லூரிக் கல்வி ஆணையரின் அதிகாரப்பூர்வ அனுமதி இன்றியே தன்னிச்சையாக அனுப்பப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. உயர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறாமல் இந்த அறிவிப்பை வெளியிட்டது குறித்து, கல்லூரி கல்வி இணை இயக்குநருக்குக் கல்லூரிக் கல்வி ஆணையர் பொன்னையா அதிரடியாகக் காரformat விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
