‘வேதம் புதிது’ பட நடிகர் ராஜாவா இது..? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே.. இப்ப எப்படி இருக்காரு பாருங்க..!

By Mahalakshmi on ஆனி 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ராஜாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பல திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகர்கள் அதன் பிறகு வாய்ப்பு குறைந்த காரணத்தினால் சினிமாவை விட்டு அப்படியே ஒதுங்கி விடுகிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பான எந்த தகவலும் தெரிவதில்லை.

   

   

அப்படி ஒரு பிரபலமான நடிகர் தான் ராஜா. கருத்தம்மா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து கடலோரக் கவிதைகள், வேதம் புதிது உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அதிலும் முக்கியமாக வேதம் புதிது என்று திரைப்படத்தில் கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாடல் மூலமாக மிகப் பிரபலமானார்.

 

 

அதைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் பெண்கள் என இவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் உருவானது. பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து தமிழில் கண்ணுக்கு கண்ணாக மற்றும் ஆதித்யா வர்மாவில் கடைசியாக நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து எந்த தமிழ் திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை. இந்நிலையில் இவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வேதம் புதிது திரைப்படத்தில் நடித்த அவரா இவர் என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

&nbsp

 

View this post on Instagram

 

A post shared by Behind Talkies (@behindtalkies)

;