அந்த கேரக்டர்ல நடிக்க மாட்டேன்னு சொன்னேன்.. ஆனா அவர் தான் வற்புறுத்தி நடிக்க வச்சாரு.. ஓபனாக பேசிய கோவை சரளா..!

By Mahalakshmi on ஜூன் 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகையாக வளம் வந்த கோவை சரளா சின்ன வீடு திரைப்படத்தில் நடித்தது குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை திறமையால் பல வருடங்களாக நடித்து வருபவர் கோவை சரளா. சினிமாவை பொறுத்தவரையில் நகைச்சுவை என்றாலே ஆண்கள் மட்டும் தான் பல வருடங்கள் நீடித்திருப்பார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் மனோரமாவுக்கு அடுத்ததாக நகைச்சுவையில் பல வருடம் நீடித்திருந்த ஒரு நடிகையென்றால் அது கோவை சரளாதான். தற்போது வரை அவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து வருகின்றார்.

   

   

தமிழில் முன்னணி காமெடி நடிகர்களாக இருந்த கவுண்டமணி, செந்தில், வடிவேலு விவேக் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படத்தின் நடித்திருக்கின்றார். அதிலும் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இவர் காமெடியாக நடனமாடும் அழகும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு எந்த காமெடி நடிகைகள் கிடைக்காத ஒரு வாய்ப்பு கிடைத்தது.

 

கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த சதிலீலாவதி திரைப்படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.. அதில் அவர் கோயம்புத்தூர் பாஷை பேசி பேசும் வசனங்கள் அனைத்தும் இன்றளவும் ஃபேமஸ் ஆக இருக்கின்றது காலம் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்ற வகையில் கோவை சரளா தற்போதும் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருகின்றார்.

இந்த வயதிலும் நகைச்சுவை திறமையை காட்டி வரும் இவர் கடைசியாக அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து கங்குவா திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். தற்போது வரை அவர் திருமணம் செய்து கொள்ளவே இல்லை. இதற்கான காரணத்தையும் சமீபத்தில் கூறியிருந்தார். அதாவது பிறக்கும்போது தனியாக வருகிறோம். போகும்போது தனியாகத்தான் போகிறோம். இடையில் இருக்கும் இந்த உறவுகள் எதற்கு என்று அவர் கூறியிருந்தார்.

சிறுவயதிலிருந்தே ஆன்மீகம் மீது இருந்த ஆர்வம் காரணமாக இப்படியே திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விட்டதாக கூறியிருந்தார். மேலும் தற்போது தான் சுதந்திரமாக வாழ்ந்து வருவதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் பாக்யராஜ் இயக்கி நடித்த சின்ன வீடு திரைப்படத்தில் ஒரு வயதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் நடிக்கும் போது கோவை சரளாவுக்கு வயது 18 ஆனால் 60 வயது கிழவி போன்று அவர் நடித்திருப்பார்.

இதைப் பற்றி பேசியவர் அந்த படத்தில் நான் நடிக்கவே மாட்டேன் என்று முதலில் கூறியிருந்தேன். ஆனால் பாக்கியராஜ் தான் என்னை கட்டாயப்படுத்தி இந்த படத்தில் நடிக்க கூறினார். இந்த படத்திற்கு பிறகு உங்களது நடிப்பு திறமை வெளியில் வரும். இதற்கு நான் உறுதி என்று கூறி எனக்கு நம்பிக்கை கொடுத்து இந்த படத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு அவர் கூறியது போலவே எனக்கு நல்ல பட வாய்ப்புகள் வந்தது என்று பேசியிருந்தார்.