டேனியல் பாலாஜி முதல் டெல்லி கணேஷ் வரை.. 2024 இல் நம்மை விட்டு பிரிந்த திரை பிரபலங்கள் லிஸ்ட்..!

By Nanthini on மார்கழி 15, 2024

Spread the love

திரைத்துறையில் பயணிக்கும் அனைவராலும் மக்கள் மனதில் இடம் பிடித்து விட முடியாது. தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் நடிகைகள் ஏராளம். அப்படி மக்கள் மனதில் இடம் பிடித்த திரை பிரபலங்கள் சில நேரங்களில் மறைந்து விடுவது ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கும். அதன்படி 2024 ஆம் ஆண்டில் பல சினிமா நடிகர்களை நாம் இழந்துள்ள நிலையில் அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் டெல்லி கணேஷ் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

   

நடிகர் டெல்லி கணேஷ்:

   

நாடக நடிகராக இருந்து தமிழ் திரை உலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் டப்பிங் கலைஞராகவும் விளங்கி வந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த நவம்பர் மாதம் காலமானார்.

 

சீரியல் நடிகர் நேத்ரன்:

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி மற்றும் பொன்னி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான யுவன்ராஜ் நேத்ரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் நான்காம் தேதி காலமானார்.

நடிகர் தனபால்:

தமிழ் திரை உலகின் பழம்பெரும் குணச்சித்திர நடிகரான தனபால் உடல்நல குறைவு காரணமாக கடந்த நவம்பர் 24ஆம் தேதி காலமானார். ரஜினி நடித்த நான் மகான் அல்ல மற்றும் விஜயகாந்த் நடித்த சொக்கத்தங்கம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

நடிகர் பிஜிலி ரமேஷ்:

யூடியூப் சேனல் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் சினிமாவில் நடித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார்.

நடிகர் அருள்மணி:

நடிகரும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இவர் தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விஸ்வேஸ்வர ராவ்:

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்த பிரபலமானவர்தான் இவர். சுமார் 350 திரைப்படங்களில் நடிகராகவும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ள இவர் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார்.

நடிகர் மோகன் நடராஜன்:

வேல் மற்றும் தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான மோகன் நடராஜன் கடந்த செப்டம்பர் மாதம் காலமானார். இவர் கோட்டைவாசல் மற்றும் மகாநதி உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

சிஐடி சகுந்தலா:

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா கடந்த செப்டம்பர் மாதம் காலமானார்.

நடிகர் சேஷு!

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். இவர் இறுதியாக வடக்கப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் காலமானார்.

நடிகர் செவ்வாழை ராசு:

கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படத்தில் பிணம் தின்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற இவர் பல திரைப்படங்களில் குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார்.

நடிகர் 'அடடே' மனோகர் காலமானார் | adade manohar passed away - hindutamil.in

அடடே மனோகர்:

பழம் பெரும் சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகரான இவர் சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, கையளவு மனது, ரயில் சினேகம் உள்ளிட்ட பல டிவி தொடர்களில் நடித்துள்ளார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் காலமானார்.

நடிகர் டேனியல் பாலாஜி:

தமிழ் சினிமாவில் வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பைரவா மற்றும் பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபலமான டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் மாதம் காலமானார்.