தமிழ் சினிமாவில் ‘காதல் கண்கட்டுதே’ படம் மூலம் அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை அதுல்யா ரவி.

மேலும், நடிகர் ஜெய்யுடன் இவர் நடித்த “கேப்மாரி” படம் நல்ல விமர்சனத்தை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது, தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை அதுல்யா. மேலும், இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும், நடிகர் சாந்தனுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘முருங்கக்கா சிப்ஸ்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார் இவர்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் அழகிய உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மிக நீளமான மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
