Connect with us

CINEMA

“சினிமாவே வேண்டாம் ஆள விடுங்க”.. வேறு துறையில் சாதித்த நடிகர்களின் வாரிசுகள்.. இதோ லிஸ்ட்…!!

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரையில் பிரபலங்களின் வாரிசுகள் பலரும் எளிதில் சினிமாவில் நுழைந்து விடுகின்றனர். ஆனால் வாரிசு நடிகர் நடிகைகளாக சினிமாவில் நுழைய விருப்பமில்லாமல் வேறு துறையை தேர்ந்தெடுத்து அதில் சாதித்த பிரபலங்கள் பலரும் உள்ளனர். அவர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

   

கமலா செல்வராஜ்:

பிரபல நடிகர் ஜெமினி கணேசனின் மகளான இவர் சென்னையில் மிகப் பெரிய மகப்பேறு மருத்துவராக உள்ளார். அதே சமயம் முதல் டெஸ்ட் டியூப் பேபியை இவர்தான் அறிமுகம் செய்தார். அதேசமயம் ஜெமினிகணேசனின் இரண்டாவது மகள் ஜெயஸ்ரீ தரும் ஒரு மருத்துவராக தான் உள்ளார்.

விஜய் சங்கர்:

ஜெய்சங்கரின் மகனான விஜய் சங்கர் சென்னையில் சிறந்த கண் மருத்துவராக இருந்து வரும் நிலையில் ஏழை மக்களுக்கு தனது மருத்துவமனையில் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்கிறார். அஜித்தின் நெருங்கிய நண்பராக இருக்கும் இவருக்கு அஜித்தும் பல உதவிகளை செய்து வருகிறார்.

சுதன் ஜெய் நாராயணன்:

கோலிவுட் திரை உலகில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன்தான் சுதன் ஜெய் நாராயணன். இவர் சினிமாவிற்கு வர விருப்பம் இல்லாமல் கலெக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த நிலையில் திருப்பூர் சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

பிரபு:

தமிழ் சினிமாவில் 90 மற்றும் 80களில் முன்னணி காமெடி நடிகராக கலக்கிய செந்திலின் மகன் தான் பிரபு. இவன் தன்னுடைய தந்தையின் அடையாளத்தை வைத்துக் கொண்டு சினிமாவில் நுழைய விருப்பம் இல்லாமல் பல் மருத்துவராக உள்ளார்.

வேதாந்த்:

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த மாதவனின் மகன் தான் வேதாந்த். இவர் ஒரு சிறந்த நீச்சல் வீரராக உள்ள நிலையில் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்திற்காக விளையாடி 5 தங்கம் 2 வெள்ளி பதக்கங்களை வாங்கினார்.

ஜெயவீனா விஜய்:

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகரான தலைவாசல் விஜயின் மகள்தான் ஜெயவீனா. இவர் ஒரு நீச்சல் வீராங்கனை. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கத்தை வென்றார்

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top