லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தில் நடிகை திரிஷா விஜயுடன் சேர்ந்து நடிக்கிறார். இதனால் விஜய் திரிஷா ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இதில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லியோ படத்தின் போஸ்டர்களும் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. படத்தில் இருந்து வெளியான 2 பாடல்களுமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. முக்கியமாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக நேற்று லியோ படத்தின் டிரெய்லர் அதிரடியாக வெளியாகியதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இந்த மாதம் 19-ஆம் தேதி லியோ திரைக்கு வர உள்ளது.
படம் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு சிக்கல்களை கடந்து வந்துள்ளது. தற்போது லியோ படம் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் தெரியவந்துள்ளது. படத்தில் திரிஷாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிரபல பாடகியான சின்மயி டப்பிங் கொடுத்துள்ளார். இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்து தன்னை தேர்வு செய்ததற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலித் ஆகிய இருவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சின்மயி சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…
தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…