Connect with us

CINEMA

1 இல்ல 2 இல்ல மொத்தம் 3.. லியோ படத்தில் த்ரிஷாவுக்கு டப்பிங் பேசியது இந்த பிரபல பாடகியா..? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தில் நடிகை திரிஷா விஜயுடன் சேர்ந்து நடிக்கிறார். இதனால் விஜய் திரிஷா ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இதில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

   

 

லியோ படத்தின் போஸ்டர்களும் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. படத்தில் இருந்து வெளியான 2 பாடல்களுமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. முக்கியமாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக நேற்று லியோ படத்தின் டிரெய்லர் அதிரடியாக வெளியாகியதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இந்த மாதம் 19-ஆம் தேதி லியோ திரைக்கு வர உள்ளது.

படம் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு சிக்கல்களை  கடந்து வந்துள்ளது. தற்போது லியோ படம் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் தெரியவந்துள்ளது. படத்தில் திரிஷாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிரபல பாடகியான சின்மயி டப்பிங் கொடுத்துள்ளார். இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்து தன்னை தேர்வு செய்ததற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலித் ஆகிய இருவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சின்மயி சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top