சீனாவை சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர் தான் இறந்த பிறகு தன்னுடைய பூனையை பராமரிக்க விரும்புவோருக்கு தன்னுடைய முழு சொத்தையும் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார். சீனாவை சேர்ந்த லாங் என்ற 82 வயது முதியவர் குவாங்டாங் மாகாணத்தில் தனியாக வசித்து வருகின்றார். பத்து வருடங்களுக்கு முன்பு அவருடைய மனைவி உயிரிழந்த நிலையில் குழந்தைகள் இல்லாததால் தனது துணைக்கு 4 தெரு பூனைகளை எடுத்து லாங் வளர்த்து வந்துள்ளார்.
இந்த 4 பூனைகளில் சியான்பா என்ற பூனை மட்டுமே இன்னும் அவருடன் இருக்கும் நிலையில் தான் உயிரிழந்த பிறகு அந்த பூனையை யார் பார்த்துக் கொள்வது என்று கவலைப்பட்ட அவர் சியான்பாவை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்ளக்கூடிய நபரை தேடி வருகின்றார். இந்நிலையில் அவருடைய பூனையை பத்திரமாக பார்த்துக் கொள்பவருக்கு தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சேமிப்புகள் உள்ளிட்ட மொத்த எஸ்டேட்டையும் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில், 12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் அஸ்வின் ராஜ்…
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…